நாவல் பழ வியாபாரம் 250 கிராம் ரூ.50| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாவல் பழ வியாபாரம் 250 கிராம் ரூ.50

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம் : வெயிலில் வியாபாரம் செய்தாலும், ஆந்திரா நாவல் பழம் வியாபாரம், திருப்திகரமாக உள்ளது என, காஞ்சிபுரத்தில் பழ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாக கூறப்படும், ஆந்திரா நாவல் பழம் காஞ்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. நாட்டு நாவல், காட்டு நாவல், ஆந்திர மாநிலத்தில் விளையும், 'ஜமுனா' நாவல் என, பல்வேறு நாவல் பழங்கள் உள்ளன.தற்போது, ஆந்திராவில் விளையும் நாவல் பழம், நாட்டு நாவலை விட அளவில் பெரியதாக இருக்கும், 'ஜமுனா' நாவல் என அழைக்கப்படும், இப்பழத்தின் சீசன் துவங்கியுள்ளதால், காஞ்சிபுரம் நகர வீதிகளில், 100 கிராம் பழம், 20 க்கும், 250 கிராம், 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பழ வியாபாரி, ஜி.செல்வம் கூறியதாவது: ஆடி மாதத்தில்தான், நாட்டு நாவல் சீசன் துவங்கும். ஆந்திராவில் விளையும் 'ஜமுனா' நாவல் சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதனால், கோயம்பேட்டில் வரத்து அதிகரித்து வருகிறது. அங்கிருந்து மொத்தமாக வாங்கி வந்து, இங்கு விற்பனை செய்கிறேன். சர்க்கரை நோய் உள்ளவர்கள், இவற்றின் மருத்துவ குணம் தெரிந்து வாங்கி செல்கின்றனர். வெயிலில் வியாபாரம் செய்தாலும், இத்தொழிலில் வருமானம் திருப்திகரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை