மரம் வெட்ட இயந்திரம்; இருளர்கள் வேலையிழப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரம் வெட்ட இயந்திரம்; இருளர்கள் வேலையிழப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சாலவாக்கம் : கிராமப்புறங்களில், இயந்திரங்கள் மூலம் மரம் வெட்ட துவங்கியுள்ளதால், காலம் காலமாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள இருளர்களுக்கு, வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கடினமான வேலைகளில், மரம் வெட்டும் தொழிலும் ஒன்றாக உள்ளது. இத்தொழிலை அதிக அளவில் இருளர்கள், குடும்பத்தோடு செய்வது பல பகுதிகளில் வழக்கமாக உள்ளது.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மதுரா சீத்தாவரம், திருவானைக்கோவில், சிறுபினாயூர், சீட்டணஞ்சேரி காவியதண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மரம் வெட்டும் தொழிலையே, அப்பகுதி இருளர்கள் ஆண்டு முழுவதும் தங்களது வாழ்வாதாரமாக மழை, வெயில் என, எந்த காலத்திலும் தொடர்ந்து செய்கின்றனர்.தற்போது, இப்பகுதி சுற்று வட்டாரத்தில் மரம் வெட்டும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இதனால், மரங்களை விலைக்கு வாங்கும் வியாபாரிகள், மரம் வெட்டும் இயந்திரத்தை வாடகைக்கு வாங்கி, அதன் மூலம் அப்பகுதியில் உள்ள இருளர்கள் மட்டுமின்றி, மற்ற தொழிலாளர்களையும் பணியில் ஈடுபடுத்துகின்றனர்.
மரம் வெட்டும் இயந்திரத்திற்கு டீசல் போடுவது மட்டுமின்றி, வியாபாரிகள் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை வாடகையாக வழங்குகின்றனர்.அத்தகைய செலவுகளை ஈடுகட்ட எங்களது கூலி குறைக்கப்படுகிறது. கூலி குறைப்பது ஒருபுறமிருக்க, இயந்திரம் கொண்டு மரம் வெட்டுவதால், இத்தொழிலுக்கு எதிர் காலத்தில் ஆட்கள் தட்டுப்பாடு இருக்காது என்பதால், எங்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.சீத்தாவரம் பகுதி இருளர்கள்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை