இயற்கையாக பழுத்த மாம்பழம்; சாலையில் களைகட்டும் விற்பனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கையாக பழுத்த மாம்பழம்; சாலையில் களைகட்டும் விற்பனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மாமல்லபுரம் : மாந்தோப்புகளில் இயற்கையாக விளைந்து, ரசாயன முறைகளை பயன்படுத்தாமல் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை, மாமல்லபுரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் களைகட்டுகிறது.விற்பனைக்கு வரும் மாம்பழங்கள் பெரும்பாலும், மரத்திலிருந்து காயாக பறித்து, கிடங்கில் குவித்து, ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்து, விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இத்தகைய பழத்தை உண்ணும் போது, வயிற்று உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.இச்சூழலில், கடலோர பகுதி தோப்புகளில், மரத்தில் இயற்கையாக பழுத்த பல வகை மாம்பழங்கள், ரசாயன கலப்பின்றி, விற்பனைக்கு வந்துள்ளன. அவற்றின் விற்பனை, நெடுஞ்சாலைகளில் களைகட்டுகிறது.கடப்பாக்கம், சுற்றுப்புற பகுதிகளில், மாந்தோப்புகள் நிறைந்துள்ளன. இங்கு விளைச்சலின் போதே, குத்தகைக்கு பெற, வியாபாரிகள் போட்டி போடுகின்றனர். அதிக தொகைக்கு குத்தகை பெறுவோர், காய்கள் பழுக்கும் வரை, பூச்சி தாக்காமல் பராமரிக்கின்றனர். காய்கள் முற்றி பழுத்ததும், சிறு வியாபாரிகளிடம், கிலோ கணக்கில் விற்கின்றனர்.பழத்தின் விலை, தோட்டத்திலிருந்து விற்பனை பகுதிக்கு வாகனத்தில் கொண்டும் செல்லும் செலவு, லாபம் என, விலை நிர்ணயித்து விற்கின்றனர்.வசிப்பிட பகுதியில் உள்ள, வீடுகளுக்கு சென்று, இயற்கையாக பழுத்ததை விளக்கி, விற்கின்றனர். கிழக்கு கடற்கரை சாலையிலும் முகாமிட்டு, வாகனத்தில் செல்வோரிடம் விற்கின்றனர்.
மதுரை சொந்த ஊர். கணவர் சுரேஷ், கடம்பாடியில் காவலாளியாக உள்ளார். பல ஆண்டுகளாக, இங்கு வசிக்கிறோம். சீசனுக்கேற்ப, வியாபாரம் செய்கிறோம். கடப்பாக்கத்திலிருந்து, ருமானி, பங்கனப்பள்ளி பழம் வாங்கி வந்து விற்கிறோம். மரத்தில் பழுத்தது சுவையாக இருப்பதால், சாலையில் செல்வோர், விரும்பி வாங்குகின்றனர். பங்கனபள்ளி, 1 கிலோ, 100 ரூபாய்க்கு விற்கிறேன். சனி, ஞாயிறு கிழமைகளில், 10 - 20 கிலோ விற்கும்.எஸ்.ஈஸ்வரி, மாம்பழ வியாபாரி, கடம்பாடி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X