புளி விலை கூடுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புளி விலை கூடுதல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடந்த ஆண்டை காட்டிலும், நடப்பாண்டில் புளி விலை, 25 ரூபாய் உயர்ந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளூர் - சோகண்டி சாலை; காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை; காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை; உத்திரமேரூர் - வந்தவாசி சாலை மற்றும் பல கிராமங்களில் பிரதான சாலை ஓரமாக ஏராளமான புளியமரங்கள் உள்ளன.இம்மரங்களில், ஏராளமான புளி விளைந்துள்ளன. இதை, ஊராட்சி நிர்வாகங்களின் ஒப்புதலின் படி, ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலம் எடுத்தவர்கள் அறுவடை செய்யும் பணியை துவக்கினர்.புளி அறுவடை செய்தவர்கள், அதை உரித்து விற்பனை செய்யும் பணியை துவக்கியுள்ளனர். 1 கிலோ தோல் நீக்கிய புளி, 70 ரூபாய் வரையில் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, கம்மவார்பாளையம், பரந்துார், கொட்டவாக்கம், ஊவேரி, ஊத்துக்காடு உள்ளிட்ட பல கிராமங்களில் புளி விற்பனை அமோகமாக இருக்கிறது.இது குறித்து, புளி வியாபாரி, சுதாகர் என்பவர் கூறியதாவது: தோல் நீக்கிய புளி, கிலோ 70 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். கொட்டை நீக்கிய புளி, இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்கிறோம். கடந்த ஆண்டை விட இந்தாண்டு, 25 ரூபாய் விலை கூடுதலாக விற்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X