பையனூர் திரைப்பட நகர குத்தகை நில சர்ச்சை; நிலத்தை திரும்ப பெறுகிறதா அரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பையனூர் திரைப்பட நகர குத்தகை நில சர்ச்சை; நிலத்தை திரும்ப பெறுகிறதா அரசு?

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பையனுார் : திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்கள் சங்கங்களுக்கு, பையனுாரில் ஒப்படைக்கப்பட்ட, நீண்ட கால குத்தகை நிலம் பயன்படுத்தப்படாமல் வீணாவதாகவும், அரசு திரும்ப பெற உள்ளதாகவும் சர்ச்சை ஏற்பட்டுஉள்ளது.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு தொழிலில், தமிழக சென்னை, முக்கிய இடமாக விளங்குகிறது. தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தயாராகும் திரைப்படங்களுக்கு, சென்னையே முக்கிய தொழில்நுட்ப மையம்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொழிலாளர்கள் சங்கங்கள், சென்னைக்கு அருகாமை யில் உள்ள பகுதியில், ஓரிடத்தில் தொழில்நுட்ப வளாகங்கள், தொழிலாளர் வசிப்பிடம் என, உருவாக்க கருதி, நீண்ட கால குத்தகைக்கு இடம் அளிக்க கோரி, தமிழக அரசிடம் வலியுறுத்தின.
தமிழக அரசும் பரிசீலித்து, மாமல்லபுரம் அடுத்த, பையனுாரில், 99 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை, 90 ஆண்டுகள் குத்தகைக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு (பெப்சி) உள்ளிட்ட திரைப்பட, தொலைக்காட்சி என, பல சங்கங்களுக்கு, ஒவ்வொன்றுக்கும் அளிக்கும், நில பரப்பிற்கேற்ப, ஆண்டு குத்தகை கட்டணம் நிர்ணயித்து ஒப்படைத்தது.இதற்கு முன், அரசு, வனத்துறையிடம் குத்தகைக்கு அளித்திருந்த நிலத்தையே திரும்ப பெற்று, திரைப்பட துறையினருக்கு ஒப்படைத்தது.
திரைப்பட நகரம் என அறிவித்து, 2008ல், பல்வேறு தொழில்நுட்ப கட்டமைப்புகள், பல பிரிவினருக்கான, 3,000 வீடுகள் அமைக்க முடிவெடுத்து, மலேசிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, பணிகள் துவக்கப்பட்டன.ஆட்சி மாற்றத்திற்கு பின், அரசு சார்பில், போதிய ஒத்துழைப்பில்லை என, கூறப்படும் நிலையில், ஒரே கட்டடத்துடன், திரைப்பட நகர பணி முடங்கி, கடந்த பத்தாண்டுகளாக, கிடப்பில் உள்ளது.
அரசின் பெரும்பரப்பு நிலம், தனியாரிடம், பயனின்றி வீணாவதாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நீண்ட கால குத்தகை நிலம், ஒப்படைக்கப்பட்ட காலத்திலிருந்து, மூன்றாண்டுகள் கடந்தும் பயன்படுத்தாவிட்டால், குத்தகையை ரத்து செய்யும் விதியின் கீழ், நிலத்தை திரும்ப பெற, அரசு முடிவெடுத்தது.சில மாதங்களுக்கு முன், வருவாய்த் துறை அறிக்கை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. குத்தகைதாரர்கள், குத்தகைக்கு பெற்ற இடத்தை பயன்படுத்தாவிட்டாலும், அதற்கான தொகையை, நிலுவையின்றி, ஆண்டுதோறும் வங்கி கணக்கில் செலுத்தி, நிலத்தை தக்கவைப்பதாகவும் தெரிகிறது.இச்சூழலில், குத்தகையை ரத்து செய்வது குறித்து, அரசு இறுதி முடிவெடுக்காததால், சர்ச்சை நீடிக்கிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை