காட்டுக்குள் போடப்பட்ட சாலை; அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை, 'பாராட்டும்' மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள் போடப்பட்ட சாலை; அதிகாரிகளின் கடமை உணர்ச்சியை, 'பாராட்டும்' மக்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சித்தாமூர் : யாருமே போகாத தைல மரக் காட்டுக்குள் மெனக்கெட்டு சாலை போட்டிருக்கும் அதிகாரிகளின் கடமை உணர்ச்சியைக் கண்டு பொதுமக்கள் பாராட்டு மழை பொழிகின்றனர்.சித்தாமூர் அடுத்துள்ளது பொலம்பாக்கம். இக்கிராமத்துக்குச் செல்ல பல வழிகள் உள்ளன. மதுராந்தகம் சூணாம்பேடு சாலையில், பெருவேலி அருகே ஒரு சாலை. அதைத் தள்ளி சற்று துாரத்திலேயே, முற்காலத்தில் போடப்பட்ட மற்றொரு சாலை.அதே போல, செய்யூர் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், ஆனந்தபுரம் அருகே ஒரு சாலை என பொலம்பாக்கத்துக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இதற்கிடையே, பேரம்பாக்கம் பகுதி அருகே, ஒரு தைலமரக்காடு உள்ளது.அதன் ஊடே ஒற்றையடிப் பாதை பொலம்பாக்கம் நோக்கிச் செல்லும். தற்போது அந்த ஒற்றையடிப்பாதையை ஜல்லி சாலையாக மாற்றி, எட்டு லட்சம் ரூபாய் செலவழித்து தங்கள் கடமை உணர்ச்சியைக் காட்டியுள்ளனர், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்.பகலிலேயே அந்த வழியாக யாரும் செல்லப் பயப்படுவர். குடிமகன்கள் மட்டுமே அந்தப் பாதையை உபயோகித்து, காட்டுக்குள் தாகசாந்தி செய்கின்றனர். அந்த இடத்தில் இப்படி, அரசுப் பணத்தை வீணடித்து ஜல்லி சாலை போட வேண்டியது அவசியம் தானா என, சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X