ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி; தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி; தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காஞ்சிபுரம் : தனியார் பள்ளியில், இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க, இன்று கடைசி தேதி என, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.நலிந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டோர் பிள்ளைகள், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் பயில, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் வழிவகை செய்கிறது.அந்த வகையில், இச்சட்டம் மூலம், நடப்பாண்டுக்கான சேர்க்கை அனைத்து பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டில், ஏழை எளியோர் விண்ணப்பிக்க, கடந்த ஏப்ரல் மாதம் முதல், மே மாதம், 18 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.அதன் படி, இன்றுடன், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 6,000 கல்வியிடங்கள், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தயாராக உள்ளன.விண்ணப்பம் செய்ய, இன்றுடன் கால அவகாசம் முடிவதால், விண்ணப்பம் செய்யாதவர்கள், இன்று விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.மேலும், தகுதியான விண்ணப்பங்களை தரம் பிரிக்கவும், குலுக்கல் மூலம் தேர்வு செய்ய வேண்டிய விபரங்கள் அடங்கிய கால அட்டவணையை, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முக்கிய நாட்கள்மே, 18: - இணைய வழியில் விண்ணப்பிக்க கடைசி நாள்மே, 19 முதல் 24: தகுதியான விண்ணப்பங்கள் அல்லது கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் விண்ணப்பங்கள் பிரிப்புமே, 25: தகவலை பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும்மே, 28: தகுதியான விண்ணப்பங்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும்மே, 29: தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விபரம், காத்திருப்பு பட்டியலில் ஐந்து பேரின் விபரங்கள் பள்ளி தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X