அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை மீண்டும் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை மீண்டும் துவக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காஞ்சிபுரம் : அரசு மருத்துவமனையில் செயல்படாமல் இருந்த, இதய நோய் சிகிச்சை பிரிவு, மீண்டும் செயல்பட துவங்கியது. கடினமான வேலை செய்யும் போது, இதயம் பாதிப்பு ஏற்படுகிறதா என, கண்டுபிடிக்க கருவி வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தனிப்பிரிவு:
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு நோய்களுக்கு தனி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இதய நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கும்வசதியும் இரண்டு ஆண்டு களுக்கு முன் துவக்கப்பட்டது.மூன்று நோயாளிகள் தங்கும் வகையில், 'ஏசி' வசதியுடன் கூடிய அறை அமைக்கப்பட்டது. அந்த பிரிவு, வாரத்தில் இரண்டு நாள் செயல்பட்டது. பின், அதற்கான மருத்துவர் வராததால், இதய நோய் சிகிச்சை பிரிவு செயல்படாமல் போனது.

'எக்கோ':
இதயம் பாதிப்பை கண்டுபிடிக்க, அதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட, 'எக்கோ' உபகரணமும் பயனின்றி கிடந்தது. இது குறித்து, நமது நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து இதய நோய் பிரிவு மீண்டும் செயல்பட மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இது குறித்து, மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுவாக இதய நோய் பல வழிகளில் வருகிறது. ஒருவர் அமைதியாக இருக்கும் போதும், கடினமான வேலை செய்யும் போதும் கூட வரலாம்.அவ்வாறு கடினமான வேலை செய்யும் போது வரக்கூடிய இதய பாதிப்பை கண்டுபிடிப்பதற்கான உபகரணம் வாங்கப்பட்டுள்ளது. அந்த உபகரணம் மீது, நோயாளியை நடக்க வைத்து, அப்போது எடுக்கப்படும், இ.சி.ஜி., மூலம் நோயின் தன்மை கண்டுபிடிக்கப்படும்.அதற்கு என பயிற்சி அளிக்கப்பட்ட டாக்டர் நியமித்துள்ளோம். இனிமேல் இதய நோய் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு, சிகிச்சை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X