சாக்லேட் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாக்லேட் தயாரிப்பு அண்ணா நகரில் பயிற்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பது குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பயிற்சி அளிக்க உள்ளது.

அண்ணா நகரில் இயங்கிவரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பது குறித்த ஒருநாள் பயிற்சி, 23ல், பயிற்சி மையத்தில் நடக்கிறது.இந்த பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுயஉதவிக் குழுக்கள், இளைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 044 - 2626 3484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு, முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பயிற்சி, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:30 மணி வரை நடக்கும். இதில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சி குறிப்பேடு, கையேடு, சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X