பிள்ளையார் கோவிலில் நாளை கொடியேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிள்ளையார் கோவிலில் நாளை கொடியேற்றம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் அடுத்த திருநாரையூர் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் மற்றும் நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை விழா நாளை (19ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.அதனையொட்டி நாளை காலை சிறப்பு அபிேஷக தீபராதனையைத் தொடர்ந்து கொடியேற்றம் நடக்கிறது. தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. 6ம் உற்சவமான 24ம் தேதி திரிபுரசுந்தரி அம்பிகா சமேத சவுந்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணம், 9ம் நாள் 27ம் தேதி தேரோட்டம், 10ம் நாள் நடராஜர் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜையையொட்டி நாளை காலை 10:00 மணிக்கு நம்பியாண்டார் நம்பிகளுக்கு சிறப்பு ேஹாமமும், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கிறது.உற்சவ நிகழ்வுகளில் தருமை ஆதீனம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், செங்கோல் ஆதீனம் ஆகிய குருமகா சன்னிதானம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை