தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளியை தாக்கிய 3 பேருக்கு வலை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாகூர்: கூலித் தொழிலாளியை பீர்பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், நத்தப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜேசேகர், 25; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் தனது நண்பருடன் பாகூர் அடுத்துள்ள குருவிநத்தம் சித்தேரி பகுதியில் உள்ள தனியார் மதுக்கடைக்கு சென்றுள்ளனர். அப்போது, அங்கு துப்புறவு தொழிலாளியாக வேலை செய்து வரும் மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணிடம், சிலர் தகராறு செய்துள்ளனர்.இதனை பார்த்த ராஜசேகர், அங்கு சென்று தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல், ராஜசேகரை ஆபசமாக திட்டி, பீர்பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், இருளஞ்சந்தை கிராமத்தை சேர்ந்த அய்யப்பன், ரமேஷ், சாவடியை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் மீது பாகூர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை