தியாகதுருகத்தில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகத்தில் வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தியாகதுருகம்: தியாகதுருகம் அருகே, வீட்டின் கதவை உடைத்து, நகை மற்றும் பணத்தை, மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம் அடுத்த கரீம்ஷாதக்கா கிராமத்தை சேர்ந்தவர் சையத்கலாம் ஆசாத், 45; வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம், இவரது மனைவி சவுஹர்ஜான், 40, வீட்டை பூட்டிவிட்டு, தனது மகள் அப்ரோஸ், 21; மருமகன் அசேன்பாஷா, 25, ஆகியோருடன் நாகூர் தர்காவிற்கு சென்றார்.இதையறிந்த மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும், சூட்கேசை உடைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு, வீட்டின் அருகே வீசி விட்டு சென்றனர்.சூட்கேசை பார்த்த அக்கம்பக்கத்தினர், சவுஹர்ஜானின் தம்பி சையத் ஷா ஆலம், 40, என்பவருக்கு தகவல் கொடுத்தனர். திறந்து கிடந்த வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது அக்காவிற்கு தகவல் தெரிவித்தார்.நாகூரில் இருந்து நேற்று மாலை 3:00 மணிக்கு சவுஹர்ஜான் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் முருகன், தடயங்களை சேகரித்தார். மர்ம நபர்களை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை