மதுபாட்டில்கள் கடத்தல் எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்கள் கடத்தல் எஸ்.எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரத்தில், புதுச்சேரி மதுபான பாட்டில்களை கடத்திய வழக்கில் சிக்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்; கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை காரில் கடத்தி வந்தார். விழுப்புரம் கம்பன் நகர் அருகே அந்த காரை நிறுத்தி சோதனை செய்த, தாலுகா போலீசார் மதுபாட்டில்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை கைது செய்தனர்.இதையடுத்து, காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, மதுபான பாட்டில்கள் கடத்திய வழக்கில் கைதான ராஜ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை 'சஸ்பெண்ட்' செய்ய எஸ்.பி., ஜெயக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை