பகுதி நேர ஓவிய ஆசிரியர் தற்கொலை மிரட்டல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பகுதி நேர ஓவிய ஆசிரியர் தற்கொலை மிரட்டல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: கடலுார் முதன்மைக் கல்வி அலுவலக மாடியில் ஏறி, பகுதி நேர ஓவிய ஆசிரியர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்தவர் சேரன், 54; இவர், நேற்று காலை 10:00 மணிக்கு கடலுாரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக மொட்டை மாடியில் ஏறி நின்று கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்ததார்.தகவலறிந்த புதுநகர் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேரனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் கீழே இறங்கி வர மறுத்தார். போலீசார் பின் வழியாக மாடிக்குச் சென்று, சேரனை சமாதானம் செய்து, கீழே அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.விசாரணையில், மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்த சேரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக பள்ளிக்கு செல்லவில்லை. சிகிச்சை முடிந்து, தொடர்ந்து பணி செய்ய ஆணை வழங்க வேண்டுமென கடந்த மார்ச் மாதம் முதன்மைக் கல்வி அதிகாரி ராஜேந்திரனிடம், மனு அளித்துள்ளார்.அதன் பேரில் மீண்டும் பணியில் சேர, சேரனுக்கு முதன்மைக் கல்வி அதிகாரி பரிந்துரை செய்தார். ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் பணி வழங்காமல் அலை கழிப்பதாகவும், இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், அவரை சமாதானம் செய்து அறிவுரை கூறி, அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை