அரசு வீடு வழங்காமல் அலைகழிப்பு குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு வீடு வழங்காமல் அலைகழிப்பு குடும்பத்துடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேப்பூர்: வேப்பூர் அருகே அரசு வீடு வழங்காமல் அலைகழித்ததால் விரக்தியடைந்த விவசாயி, குடும்பத்துடன் ஒன்றிய அலுவலகத்தின் முன் தீக்குளிக்க முயன்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.வேப்பூர் அடுத்த கோவிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன், 44; விவசாயி. குடிசை வீட்டில் வசித்து வரும் இவர், தனக்கு பசுமை அல்லது 'தானே' வீடு ஒதுக்கக்கோரி நல்லுார் ஒன்றிய பி.டி.ஓ.,விடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அவர், வீட்டு வரி ரசீது உள்ளிட்ட சான்றிதழ்களை ஊராட்சி செயலரிடம் கொடுத்து, அரசு ஒதுக்கீட்டில் வீடு பெற அறிவுறுத்தினார்.அதன்படி, ஊராட்சி செயலரிடம் ஆவணங்கள் கொடுத்தும் வீடு ஒதுக்கப்படவில்லை. ஊராட்சி செயலர் தன்மீது இருக்கும் முன்விரோதம் காரணமாக வீடு ஒதுக்காமல் அலைகழிப்பதாக கூறி, நேற்று காலை 11:00 மணியளவில் தனது மனைவி தேவகி, 35; மகன்கள் சுரேஷ், 12; சுதீஷ், 10; விமல், 7; ஆகியோருடன் நல்லுார் ஒன்றிய அலுவலகம் முன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.உடன் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, தண்ணீர் ஊற்றினர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சந்திரசேகரிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் அறுவுறுத்துவதாக கூறி, சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை