இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் நாளை துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இரும்பை மாகாளேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் நாளை துவக்கம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு: இரும்பை மாகாளேஸ்வரர் கோவில், பிரம்மோற்சவ விழா நாளை 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வானூர் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ மாகாளேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவ விழா, நாளை (19ம் தேதி) காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.முன்னதாக இன்று 18ம் தேதி காலை மகா கணபதி மற்றும் வர்ணமுத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, விநாயகர் உள்புறப்பாடு நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 7:00 மணிக்கு அபிஷேகம், சந்திரசேகரர் உள்புறப்பாடு, காலை 10:00 மணிக்கு மூலவர் அபிஷேகம் நடக்கிறது.விழாவையொட்டி, தினசரி இரவு 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனம், புன்னை மர வாகனம், குதிரை வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், 27ம் தேதி 9:00 மணிக்கு திருத்தேர் விழாவும் நடக்கிறது. 28ம் தேதி காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி, 29ம் தேதி மாலை 7:00 மணிக்கு தெப்பல் உற்சவமும், 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு விடையாற்றி உற்சவம், 31ம் தேதி மாலை 7:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் செல்வராசு, செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கிராம பஞ்சாயத்தார்கள், பொது மக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X