எஸ்.ஆர்.எம்.,மில் நுண்கலை பட்டப்படிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம்.,மில் நுண்கலை பட்டப்படிப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை, காட்டாங்குளத்துாரில் உள்ள, எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், நுண்கலை பட்டப்படிப்புகள் துவங்க உள்ளன.இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நுண்கலைகளை முறைசார்ந்த கல்வியாக மாற்றி, நுண்கலைஞர்களுக்கு, வருவாய் ஈட்டித் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தேசிய அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் வழியாக, நுண்கலை கல்வி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, இக்கல்வி நிறுவனத்தில், சான்றிதழ் படிப்புகளாக உள்ள, இசை, நடனம், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றை, இளநிலை பட்டப்படிப்புகளாக மாற்றி வழங்கப்படும். இந்த நுண்கலை மையம், இசையமைப்பாளரும், இசைக்கலைஞருமான ஷோபனா விக்னேஷ் தலைமையில் இயங்கும். மேலும், எல்.சுப்பிரமணியம், ஓ.எஸ்.அருண், மீட்டா பண்டிட், பிரியதர்ஷினி கோவிந்த், ராதிகா ஷுராஜித், டெக்கான் மூர்த்தி உள்ளிட்டோரும், நுண்கலை பயிற்சி அளிக்க உள்ளனர்.உலகின் புகழ்பெற்ற பல்கலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட சலுகைகளையும் பெற வாய்ப்பு ஏற்படும். இந்த படிப்புகள், வரும் மார்கழி விழாவின் போது துவங்கும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை