நியூ பிரின்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நியூ பிரின்ஸ் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, 28 ஆண்டுகளாக, 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.சென்னை, உள்ளகரம் மற்றும் ஆதம்பாக்கம் நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 356 மாணவர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.மேலும், 28 ஆண்டுகளாக தொடர்ந்து, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று, இந்த பள்ளிகள் சாதனை படைத்துள்ளன. ஆதம்பாக்கம் பள்ளியில் படித்த, ஒன்பது மாணவர்கள், 1,150 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளனர். 1,100க்கும் மேல், 24 மாணவர்களும், 1,000க்கு மேல், 69 மாணவர்களும் பெற்றுள்ளனர்.மேலும், கணிதப்பாடத்தில், ஐந்து மாணவர்கள், வணிகவியலில், மூன்று மாணவர்கள், கணக்கு பதிவியலில், ஆறு மாணவர்கள், வணிக கணித பாடத்தில், இரண்டு மாணவர்கள் என, 16 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.உள்ளகரம் பள்ளியில் படித்த, ஐந்து மாணவர்கள், 1,150க்கும் மேல், மதிப்பெண் பெற்றுள்ளனர். 1,100க்கும் மேல், 30 மாணவர்களும், 1,000க்கும் மேல், 65 மாணவர்களும் பெற்றுள்ளனர்.மேலும், வணிகவியலில் ஐந்து; கணக்கு பதிவியலில், இரண்டு; வணிக கணிதம் பாடத்தில் ஒருவர் என, எட்டு பேர், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கல்வி குழும தலைவர் மற்றும் தாளாளர் லோகநாதன், செயலர் மகாலட்சுமி, துணை தலைவர்கள் நவீன் பிரசாத், அர்ச்சனா, ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா, மேற்பார்வையாளர் ரேமண்ட் கொர்னேய்ல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X