விதிமீறல் கட்டடத்திற்கு, 'சீல்'| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டடத்திற்கு, 'சீல்'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: மயிலாப்பூரில், விதிமுறை மீறி கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்தனர்.தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில், சிலர் விதிமுறை மீறி, கட்டடம் கட்டி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் அனைத்தையும், ஆய்வு செய்ய, மண்டல அதிகாரி, பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.அதன்படி, ஆய்வு செய்ததில், 126வது வார்டு, வெங்கடகிருஷ்ணன் அய்யர் தெருவில், புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம், விதிமீறி கட்டப்பட்டு வருவது, தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், மாநகராட்சி அதிகாரிகள், அந்த கட்டடத்திற்கு, சீல் வைத்தனர்.தொடர்ந்து, மற்ற பகுதிகளிலும் புதிதாககட்டப்பட்டு வரும் கட்டடங்களை, பொறியாளர்கள் ஆய்வு செய்து, விதிமீறல்கள் இருந்தால், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X