குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.20 கோடியில் 700 கடைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ரூ.20 கோடியில் 700 கடைகள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், 20 கோடி ரூபாயில், 700 கடைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 8,000 வீடுகளில், மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளன.அடுத்த ஆண்டு இறுதியில், அனைத்து வீடுகளும் மறு குடியமர்வு செய்யப்படும். அங்கு வசிப்போர் வசதிக்காக, பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. சில்லரை பொருட்கள், குடியிருப்பு வளாகத்தில் கிடைக்கும் வகையில், கடைகள் கட்ட குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.வளாகத்தில் உள்ள காலி இடங்களில், 700 கடைகள் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கடையும், 120 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும். இதற்காக, 20 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இடத்தை பொறுத்து, ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்து, ஏலத்தின் அடிப்படையில், வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.இதற்கான கோப்புகள், துறை அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளன. ஓரிரு மாதத்தில், கடைகள் கட்டும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை