சரக்கு ரயிலில் தீ தடுப்பு; போர்ட்டருக்கு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரக்கு ரயிலில் தீ தடுப்பு; போர்ட்டருக்கு பரிசு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சரக்கு ரயில் தீ விபத்தில் சிக்காமல் தடுக்க உதவிய போர்ட்டருக்கு, பண பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்திய உணவு கார்ப்பரேஷனின் அரிசி மூட்டைகள் ஏற்பட்ட சரக்கு ரயில், 10ம் தேதி, விருத்தாச்சலத்தில் இருந்து முகாசபரூர் ரயில் நிலையத்தில், லுாப் லைனில் கடந்து செல்ல முயன்றது. அப்போது, சேலத்தில் இருந்து விருத்தாச்சலத்திற்கு செல்லும் பயணியர் ரயில், நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.சரக்கு ரயிலின், 13வது பெட்டியின் சக்கர அச்சில் தீ பிழம்பு ஏற்பட்டு, புகையுடன் தீ பொறி பறந்தது. நிலையத்தில் துப்புரவு தொழிலாளியாகவும், போர்ட்டராகவும் பணி புரியும் சஜி என்பவர், இதை பார்த்து, அவசர காலத்தில் கையாளப்படும் கை சைகையால், சரக்கு ரயில் ஓட்டுனருக்கு சிக்னல் காட்டினார். உடனடியாக, சரக்கு ரயில் நிறுத்தப்பட்டது. பின், சேலம் - விருத்தாச்சலம் ரயிலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.உடன், நிலையத்தில் இருந்த தீ தடுப்பு கருவியை எடுத்து வந்து, தீயை அணைக்க சஜி உதவினார். தீ அணைக்கப்பட்டதால், சரக்கு ரயிலில் இருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி மூட்டைகள் மீட்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெட்டி அப்புறப்படுத்தப்பட்ட பின், சேலம் - விருத்தாச்சலம் ரயிலும், சரக்கு ரயிலும் புறப்பட்டு சென்றன. விரைவாக செயல்பட்டு, சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க உதவிய சஜிக்கு, தெற்கு ரயில்வே பொது மேலாளர் குல்ஷ்ரேஸ்தா, சென்னையில், நேற்று முன்தினம், பண பரிசு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை