கூவத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ; இம்மாத இறுதிக்குள் முடிக்க கெடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூவத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ; இம்மாத இறுதிக்குள் முடிக்க கெடு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கூவம் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை, இம்மாத இறுதிக்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கும் கூவம் ஆறு, சென்னையின் பல்வேறு பகுதிகள் வழியாக பயணித்து, நேப்பியர் பாலம் அருகே, வங்ககடலில் கலக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் பருத்திப்பட்டு வரை, கூவம் ஆற்றில் நல்ல நீரோட்டம் உள்ளது. அதன்பிறகு, சென்னையில் கடலில் கலக்கும் வரை, கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. கூவத்தை ஆக்கிரமித்து குடிசைகள் மட்டுமின்றி, சிமென்ட் கூரை வீடுகள், கான்கிரீட் வீடுகள், சிறிய தொழிற்சாலைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.கூவத்தை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர, அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக, பொதுப்பணி, வருவாய், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகள், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது.முதற்கட்டமாக, கூவம் கரையோர ஆக்கிரமிப்புகள் வரையறை செய்யப்பட்டு, அவற்றை அகற்றும் பணிகள், படிப்படியாக நடந்து வருகின்றன.ஏற்கனவே, திருவேற்காடு, மதுரவாயல், கோயம்பேடு, அமைந்தகரை உள்ளிட்ட இடங்களில், ஆக்கிரமிப்பு குடிசைகள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டுள்ளன.உயர் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்கு காரணமாக, கோயம்பேடு, கூவத்தை ஆக்கிரமித்துள்ள நட்சத்திர ஓட்டலை அகற்றுவது தாமதமாகி வருகிறது.இதைத்தொடர்ந்து, தற்போது, எழும்பூர், புதுப்பேட்டையை ஒட்டிய பகுதிகளில், கூவம் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடக்கின்றன.சில வாரங்களுக்கு முன், அண்ணாசாலை பின்புறம் உள்ள கூவம் கரையில் இருந்த, 150க்கும் மேற்பட்ட குடிசைகள், கட்டட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பாளர்களுக்கு, பெரும்பாக்கத்தில் மாற்று வீடுகள் வழங்கப்பட்டன. புதுப்பேட்டை கூவத்தை ஆக்கிரமித்திருந்த குடிசைகள், வீடுகள், கார், டூ - வீலர் ஒர்க் ஷாப்களை அகற்றும் பணிகள் சில நாட்களாக நடக்கின்றன.நேற்று வரை, 220க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. லேங்க்ஸ் கார்டன் பகுதியில், கூவத்தை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டிருந்த, 100க்கும் மேற்பட்ட கிரேன்கள், பழைய லாரிகள், கார்கள், அங்கிருந்து நேற்று அப்புறப்படுத்தப்பட்டன.புதுப்பேட்டையில், 570க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள், அகற்றப்படவுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கு ஆக்கிரமிப்புகள் அகற்றிய பகுதிகளில், கூவத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கும் ஏற்பாடு துவங்கப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை, பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக, இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிப்பதற்கு, அரசு உத்தரவிட்டு உள்ளது.
-நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X