கடல் அலையில் சிக்கி மாயமாவோர் எண்ணிக்கை... அதிகரிப்பு! சென்னையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்படுமா?| Dinamalar

தமிழ்நாடு

கடல் அலையில் சிக்கி மாயமாவோர் எண்ணிக்கை... அதிகரிப்பு! சென்னையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்படுமா?

Added : மே 18, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கடல் அலையில் சிக்கி மாயமாவோர் எண்ணிக்கை... அதிகரிப்பு! சென்னையில் சிறப்பு மீட்பு குழு ஏற்படுத்தப்படுமா?

சென்னையில், கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு, கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கடல் அலைக்கு இரையாகும் இளைஞர்களை பாதுகாக்க, போலீசார் சிறப்பு மீட்பு குழுவை ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில், ஏராளமான சுற்றுலா தலங்கள் இருந்தாலும், அனைவரையும் வெகுவாக கவர்ந்தது, மெரினா கடற்கரை. உலகின், மிக நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினாவிற்கு, தினசரி உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஆட்கொணர்வு மனு:
அவ்வாறு வருபவர்களில், பெரும்பாலான இளைஞர்கள், கடலில் குளிக்கும் போது, பெரிய அலையில் சிக்கி, மூழ்கி உயிரிழக்கின்றனர். இதில், சிலரது உடல், சிறிது நேரத்திலேயே கரை ஒதுங்கிவிடும். சிலரது உடல், மற்ற பகுதிகளில் கரை ஒதுங்கும். ஆனால், பலரது உடல், கிடைக்காமலேயே போய்விடுகிறது. 2017 - 18ல், 15 முதல், 30 வயதுக்குட்பட்ட, 20 பேர், மெரினாவில், கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு, இதுவரை கிடைக்கவில்லை.

வியாசர்பாடியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவரது மகன் ஆகாஷ், செப்டம்பரில், மெரினாவில் தன் நண்பர்களுடன் கடலில் குளித்துக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டு, மாயமானான். அதைத்தொடர்ந்து, ஹரிகிருஷ்ணன், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
குதிரை படை:
இந்த வழக்கை, நீதிபதி ராஜிவ் ஷக்தேர் விசாரித்த போது, திருவல்லிக்கேணி ஆய்வாளர், 'மாணவனை கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டும், கண்டுபிடிக்க முடியவில்லை' என, தெரிவித்தார்.இதையடுத்து, வரும் காலங்களில், இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க, எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை, அறிக்கையாக தாக்கல் செய்ய, உள்துறை செயலர், நிரஞ்சன் மார்டிக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

நிரஞ்சன் மார்டியின் பதில் அறிக்கையில், 'மெரினா கடற்கரையில், ஆபத்தான பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள, 4 கி.மீ., பகுதியில், பொதுமக்கள் கடலுக்குள் இறங்காமல் தடுக்க, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'ஆங்காங்கே, எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குதிரை படை போலீசார், காலை மற்றும் மாலை நேரங்களில், ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்' என, தெரிவித்து இருந்தார்.

நடவடிக்கை:
ஆனால், அவர் அறிக்கையில் கூறிய நடவடிக்கைகள் அனைத்தும், வெறும் பெயரளவிற்கு மட்டுமே இருப்பதால், மெரினாவில், இன்றளவும் உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையின் சுற்றுலா தலமான, மெரினா, எலியட்ஸ் கடற்கரையில், சாதாரண நாட்களில் மட்டுமே, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற நாட்களில், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், ரோந்து பணியில், போலீசார் ஈடுபடுவதில்லை.

கடந்த, 2008ல், கடலில் செல்லும் மக்களைத் தடுக்க, பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களை, போலீசார் பயன்படுத்தி வந்தனர். அவற்றை, நாளடைவில், போலீசார் நடைமுறைப்படுத்தவில்லை. கடலோரங்களில் உள்ள மெரினா, அண்ணாசதுக்கம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட, பல காவல் நிலையங்களிலும், ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அங்குள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
சிறப்பு மீட்பு குழு எங்கே?
மூத்த, ஐ.பி.எஸ்., அதிகாரி, சைலேந்திரபாபு, கடலோர காவல்படை, ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த போது, கடலில் தத்தளிப்பவர்களை மீட்க, மூன்று சிறப்பு மீட்பு குழுவை அமைத்தார். இந்த குழு, கடற்கரை பகுதியில் முகாமிட்டு, கடலில் ஆனந்த குளியல் போடும் போது, ராட்சத அலையில் இழுத்து செல்பவர்களை மீட்கும். இக்குழு செயல்பட்ட போது, 100க்கும் மேற்பட்டவர்களை காப்பாற்றி உள்ளது. அவர் இடமாறுதல் ஆன பிறகு, இக்குழு என்ன ஆனது என்றே தெரியவில்லை. கடலில் குளிப்பவர்களை, போலீசாரால் கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறி தான். ஆனால், அவசர காலங்களில் உதவ, மீட்பு குழுக்களை, மெரினா, எலியட்ஸ் போன்ற சுற்றுலா தலங்களில் களம் இறக்குவது சாத்தியம் தானே!

இடம் ஆண்டு இறந்தோர் மாயமானோர்மெரினா 2016 15 11 2017 25 19எலியட்ஸ் 2016 12 9 2017 5 3நீலாங்கரை 2016 8 3 2017 3 2

-நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Renga Naayagi - Delhi,இந்தியா
18-மே-201820:24:19 IST Report Abuse
Renga Naayagi அமெரிக்க கடற் பகுதிகளில் இளைஞர்களும் இளம் பெண்களும் எவ்வளவு சாகச விளையாட்டு விளையாடுகிறார்கள் ..கடலில் தைரியமாக விளையாட பயிற்சி அளிக்க வேண்டும் ...பயமுறுத்தக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
18-மே-201807:43:42 IST Report Abuse
Amirthalingam Sinniah நாலு கிலோமீற்றர் கம்பி வலை வேலியை கடலினுள் குறிப்பிட்ட தூரத்தில் அமைத்து ஆபத்தை குறைக்கலாம். குதிரை படையும் தேவை இல்லை,குளறி அழவும் தேவையில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை