அரசு பள்ளி மாணவிகள் 93 சதவீத தேர்ச்சி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவிகள் 93 சதவீத தேர்ச்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் 93 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.வணிகவியல் பாடத்தில் மாணவி 200க்கு 200 மதிப்பெண் பெற்றார். வெற்றி பெற்ற மாணவிகளை தலைமையாசிரியர் பூங்கொடி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரோஸ்கண்ணன் பாராட்டினர்.டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளியில் 86 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி பல ஆண்டுகளுக்கு பிறகு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி சதவீதத்திற்காக உழைத்த ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் ராஜா சுகுமார் தெய்வசந்தர் பாராட்டினார்.ஆர்.ஆர்.மெட்ரிக் பள்ளியில் 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களை நிர்வாகி லட்சுமி நாராயணன், முதல்வர் லட்சுமி பாராட்டினர்.மேல்பட்டாம்பாக்கம் பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளியில் 98.5 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவிகளை தலைமையாசிரியை ஜெயசவுந்தரி பாராட்டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை