பிளஸ் 2 தேர்வில் காலை வாரும் விருதை கல்வி மாவட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 தேர்வில் காலை வாரும் விருதை கல்வி மாவட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலுார்: அரசு பொதுத் தேர்வுகளில் விருத்தாசலம் கல்வி மாவட்டம் தொடர்ந்து பின் தங்கியுள்ளதால் கடலுார் வருவாய் மாவட்டம், மாநில அளவில் பின் தள்ளப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கடலுார் மற்றும் விருத்தாசலம் கல்வி மாவட்டங்கள் உள்ளன. நடந்து முடிந்துள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் கடலுார் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 124 மாணவ, மாணவியர்களில் 18 ஆயிரத்து 820 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.09 ஆகும். இது கடந்தாண்டைவிட 2.03 சதவீதம் கூடுதல்.விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுதிய 9,828 மாணவ, மாணவியர்களில் 8,013 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 81.53 ஆகும். இது கடந்தாண்டைவிட 1.03 சதவீதம் அதிகம். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் தொடர்ந்து தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதால், கடலுார் வருவாய் மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையை மாற்றிட விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை