'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல நடிகர், 'அட்வைஸ்'| Dinamalar

'அரசியல் ரோஜா படுக்கை அல்ல'; ரஜினி, கமலுக்கு பிரபல நடிகர், 'அட்வைஸ்'

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018 | கருத்துகள் (58)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அரசியல்,ரோஜா படுக்கை,அல்ல,ரஜினி,பிரபல நடிகர்,அட்வைஸ்

மும்பை: ''அரசியல் என்பது, ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல,'' என, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு, பிரபல ஹிந்தி நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா அறிவுரை வழங்கியுள்ளார்.

பாலிவுட் நடிகரும், பா.ஜ., அதிருப்தி, எம்.பி.,யுமான, சத்ருகன் சின்ஹா, 71; மத்திய அமைச்சர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். தமிழகத்தில், ரஜினி மற்றும் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து, மும்பையில், நிருபர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறியதாவது: ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பர் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு முன், என்னிடம் அறிவுரை கேட்கவில்லை.

ஒருவேளை கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணி வெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன். ஏனென்றால், அவர்கள் நினைப்பதை போல, அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில், ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது; அதை மீறி, இவர்களால் அரசியல் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
19-மே-201808:12:17 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> என்னாய்யா நீறு காசு பாக்கலியா என்ன இதை எல்லாம் நம்பறதுக்கு நாங்கல்லாம் என்ன படிக்காத கூமுட்டைகள் இல்லேப்பா ok
Rate this:
Share this comment
Cancel
Balamurugan - coimbatore,இந்தியா
18-மே-201817:07:32 IST Report Abuse
Balamurugan ஐயா சத்ருகன் சின்ஹா ரஜினியும் கமலும் உங்களை போல எந்த கட்சியிலும் சேரவில்லை மாற்றாக தனி கட்சி ஆரம்பிக்கிறார்கள் அதனால் அவர்கள் எந்த மேலிடத்திருக்கும் பதில் சொல்லவேண்டும் என்ற அவசியம் உங்களை போல இல்லை. அதனால் நீங்கள் ஒன்றும் ரொம்ப கவலைப்பட தேவை இல்லை. அதிலும் ஒரு வார்த்தை சொன்னீங்களே ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்குன்னு அதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அட்வைஸ் பண்றேன் சொல்லி திமுகவுக்கு சொம்பு தூக்கவேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
kowsik Rishi - Chennai,இந்தியா
18-மே-201816:57:41 IST Report Abuse
kowsik Rishi நிச்சயமாக ரஜினிக்கும் கமலுக்கும் அரசியல் செல்வி ஜெ ஜெ வை போலெ மு.கருணநிதி என்ற முள்ளில்லாத ரோஜா ரோஜா படுக்கை தான் செல்வி ஜெ ஜெ விற்கு தான் அப்படி இருந்தது கமலுக்கும் ரஜினிக்கும் அது அப்படி இருக்காது அவர்கள் எம்.ஜி.ஆரை போலெ ஒரு புரிதல் வைத்து கொண்டு தான் ஆடுவார்கள் செல்வி ஜெ ஜெ அங்கே தான் தனித்து விடப்பட்டார் அழிந்தேபோனார்
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-மே-201816:53:44 IST Report Abuse
vbs manian கமழும் ரஜனியும் இவரை ஆலோசிக்காமல் இருந்ததே நல்லது. போகாத ஊருக்கு வழி சொல்லுவார். இப்போதே குழம்பி போயிருக்கும் இருவரும் இன்னும் குழம்பி போயிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
18-மே-201816:35:03 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) பாஜகவின் கண்ணி வெடிகள் , சத்ருகன் மற்றும் யஷ்வந்த் சின்கா , ராம் ஜெட் மலானி மற்றும் அருண் ஷோரி .
Rate this:
Share this comment
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
18-மே-201816:30:48 IST Report Abuse
Bala Murugan ரஜினிதான் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வந்தார். கமலுக்கு அது பிடிக்கவே இல்லை.ஆனால் திடீரென்று கமல் அரசியலில் தீவிரமாகி விட்டதோடு அல்லாமல் கட்சி ஆரம்பித்து கொடியும் வைத்துவிட்டார். ரஜினியிடம் முன்னால் இருந்த வேகம் இப்பொழுது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
18-மே-201816:12:11 IST Report Abuse
Nallavan Nallavan ரோஜாவைப் பத்திப் பேசாதீங்க ..... செல்வமணி கோவிச்சுக்குவாரு ....
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
18-மே-201816:10:03 IST Report Abuse
Snake Babu முதலில் அனைத்துக்கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும், இருக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற ஆவலோடு வந்திருப்பவர்கள். ஆகையால் அனைத்தையும் தூக்கியெறிய வேண்டும். இது ஒரே நேரத்தில் நடக்காது அதிக நாள் பிடிக்கும் அதேநேரத்தில் இவர்கள் மேலான எதிர்ப்பை காட்டியே ஆக வேண்டும். மக்கள் விழிக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரிய வேண்டும். அடுத்து //தமிழகத்தில், ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது".....// மறுபடியும் காலம் காலமாக இருந்து வரும் பழக்கம் தான். பிஜேபியின் அடாவடித்தனத்தால் தமிழகம் அதனுடைய எதிர்ப்பை திமுக மூலமாக காட்ட பார்க்கிறது. அதனால் இப்படி ஒரு செய்தி. ஆனால் உண்மையில் ஸ்தாலினும் சிறந்த தேர்வு இல்லை. நம்முடைய தூரதிஸ்டம் எந்த தலைவனும் நமக்கு இல்லை மாநிலத்திற்கும் சரி மத்தியிலும் சரி. ஆகையால் இந்த கேடுகெட்டவர்களால் மறுபடி மறுபடி ஏமாற்றப்பட்டு வந்துகொண்டிருக்கிறோம். நான் வேண்டிகொள்வது என்ன வென்றால் எப்படியேனும் இவர்களுக்கு நம் எதிர்ப்பை காட்டவேண்டும் நோட்டோ முதல் தேர்வு அடுத்து இருக்கும் வேட்ப்பாளர்களில் சிறந்தவர் எவரோ அவருக்கு ஒட்டு, கமல் ரஜினி அவர்கள் ரெண்டுபேருமே பினாமிகள் தான் எதிர்ப்பு ஓட்டை அப்படியே எடுத்துக் கொள்வதற்கு கட்சிகள் ஏற்பாடு செய்திருக்கும் அடிமைகளே, இது ரெண்டும் சேர்ந்து குட்டையை குழப்ப உதவுமே தவிர வேறெதுக்கும் ஊதுவது. ஒட்டுமொத்தமாக பிஜேபி அராஜகம் தொடரும் பட்சத்தில் அதனுடைய வெறுப்பினால் ஸ்டாப்களின் வரலாம் ஆனால் ஸ்தாலினும் இன்னொரு எடப்பாடியும் பண்ணிரும் தான் மத்தியில் பிஜேபி இருக்கும் பட்சத்தில் நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-மே-201815:51:04 IST Report Abuse
Endrum Indian கன்னி வெடிகளை பார்த்த சத்ருகன் சின்ஹாவுக்கு இப்படித்தான் பேசத் தெரியும்??? அறிவு பூர்வமாக இது வரை சிந்திக்காமல் தான் இருக்கும் கட்சியில் தானே முட்டாள்தனமான வாதத்தை வைக்கும் இதெல்லாம் ஒரு ஆளு இது அட்வைஸ் சொல்லுது மற்றவர்களுக்கு????
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
18-மே-201815:30:35 IST Report Abuse
muthu Rajendran கமல் எல்லோருக்கும் புரிகிறமாதிரி பேசுகிறவரைக்கும் ரஜினி அரசியலை புரிஞ்சுகிற வரைக்கும் அரசியலுக்கும் அவர்களுக்கும் எந்த சேதாரமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை