தண்ணீர்... தண்ணீர்...| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர்... தண்ணீர்...

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் ஊராட்சியில் சுப்ரமணியதெரு, நடுத்தெரு, திரவுபதியம்மன் கோவில், தொட்டித்தெரு, தோப்பு தெரு ஆகிய பகுதிகளுக்கு ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.கிராமத்தில் இரு மோட்டார்களில் ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. மற்றொரு மோட்டார் கடந்த 4 மாதங்களுக்கு முன் பழுதானது. குளத்தின் அருகே புதியதாக கடந்த இரு மாதங்களுக்கு முன் போட்ட போர்வெல்லுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் விவசாய மோட்டார்களை தேடிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து ஊராட்சி செயலர் ராஜவேல் கூறுகையில், தற்போது இரண்டு மோட்டார்களும் வேலை செய்கிறது. ஆனால், குறைவான அளவான தண்ணீர் வருகிறது. இதனை தவிர்க்க எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியுதவியுடன் குளத்தின் அருகே போடப்பட்டுள்ள புதிய போர்வெல்லுக்கு இன்னும் 10 நாட்களில் மின் இணைப்பு கிடைத்தவுடன் முறையான குடிநீர் வழங்கப்படும். குடிநீர் பிரச்னையும் தீரும்' என்றார்.சேத்தியாத்தோப்புஆயிப்பேட்டை ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. என்ன காரணத்தினாலோ கடந்த நான்கு ஆண்டுகளாக குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. ஒரே ஒரு கை பம்பு மட்டுமே உள்ள நிலையில், குடிநீருக்காக அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு மினி டேங்க் அமைத்து தரும்படி பல முறை கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகத்தில் மனுகொடுத்தும் எந்த பலனும் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பி.டி.ஓ., செல்வராஜி கூறுகையில், 'ஆயிப்பேட்டை கிராமத்தில் குடிநீர் வராததது குறித்து எந்த புகாரும் இதுவரை அலுவலகத்திற்கு வரவில்லை. கிராமத்தில் நேரடியாக ஆய்வு செய்து, குடிநீர் தட்டுப்பாடு இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.திட்டக்குடிதிட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யாமல், அருகிலுள்ள மினிடேங்க் மூலம் குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே அங்கு செயல்பட்ட மோட்டாரை எடுத்துச்சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதாக கூறினார். ஆனால் தற்போது, மேல்நிலை நீர்தேக்க தொட்டியிலிருந்தும், மினி டேங்க்கிலிருந்தும் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் குடிநீரைத்தேடி அலைய வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து ஊராட்சி செயலர் முரளி கூறுகையில், 'மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றுவதற்கு வேறு இடத்தில் புதிய போர் போடப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு கிடைத்ததும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். மினிடேங்க்கில் செயல்பட்டு வந்த மோட்டார் பழுதடைந்துள்ளதால், பழுது நீக்கம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பழுதுநீக்கம் செய்யப்பட்டு மினிடேங்க் மூலமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை