எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கண்டமங்கலம்: விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை விண்ணப்பங்கங்களை, வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர்., மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;விழுப்புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்., அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2018-2019ம் கல்வியாண்டிற்கான மாணவியர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள், மே 14ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் வந்து சேர வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., மாணவிகள் சாதிச் சான்றிதழ் அசலைக் காண்பித்து, நகல் ஒன்றினை சமர்பித்து விண்ணப்பத்தினை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.கலந்தாய்வு நாட்கள்சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்) தகுதியுள்ள அனைவருக்கும் வரும் ஜூன் 11ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.பி.ஏ., ஆங்கிலம்; சிறப்பு ஆங்கிலத்தில் பயின்றவர், பகுதி 2 ஆங்கிலத்தில் மதிப்பெண் 200 முதல் 140 வரை, வரும் ஜூன் 11ம் தேதி கலந்தாய்வு நடைபெறும்.பி.எஸ்.சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல்; பாடத்திற்கு பகுதி 3 பாடத்தில் மதிப்பெண் 800 முதல் 500 வரை கலந்தாய்வு ஜூன் 12ம் தேதி நடைபெறும்.பி.காம்., (பொது); பகுதி 3 பாடத்தில் மதிப்பெண் 800 முதல் 500வரை பெற்றவர்களுக்கு கலந்தாய்வு வரும் ஜூன் 13ம் தேதி நடைபெறுகிறது.பி.காம்., (வெக்கேஷனல்): பகுதி 3 பாடத்தில் மதிப்பெண் 900 முதல் அதற்கு மேல் பெற்றவர்களுக்கு வரும் ஜூன் 13ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.பி.ஏ., தழிழ்; சிறப்புத் தமிழ் பயின்றவர்கள் மற்றும் பகுதி 1 தமிழில் மதிப்பெண் 200 முதல் 150வரை பெற்றவர்களுக்கு வரும் ஜூன் 14ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X