தங்கத்தின் தரமறியும் பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தங்கத்தின் தரமறியும் பயிற்சி விண்ணப்பங்கள் வழங்கல்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

விழுப்புரம்: விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் வேலை வாய்ப்புக்கான தங்கத்தின் தரமறியும் பயிற்சிக்கான விண்ணப்பம் தற்போதுவழங்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு, தங்க நகை பற்றியவிழிப்புணர்வு மற்றும் பயிற்சி முடித்த பின்னர் கூட்டுறவு வங்கிகள், தேசியவங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டாளராகபணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி சான்றிதழை வேலை வாய்ப்பகத்தில் பதிவுசெய்யலாம்.இப்பயிற்சியின் போது தங்கத்தை பற்றிய அடிப்படை பயிற்சி, பழைய நகையை தரம் பார்த்து கொள்முதல், உரைகல்லில் தரம் அறிதல், தங்கத்தில் இன்றைய நவீன தொழில் நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், கேடிஎம் மற்றும் ஹால்மார்க் பற்றிய விளக்கம் தொடர்பான பயிற்சியுடன்,பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படு கிறது.இப்பயிற்சியில் சேர 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பயிற்சியில் சேரலாம்.பயிற்சியின் காலம் 2 மாதங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பயிற்சிநடைபெறும்.பயிற்சி ஜூன் 9ம் தேதி துவங்குகிறது. பயிற்சிக்கட்டணம் 4,543 ரூபாய்- மட்டுமே (உபகரணங்கள் உட்பட) பயிற்சி முடிந்து தேர்ச்சிக்குப் பின்னர், தமிழ்நாடுகூட்டுறவு ஒன்றிய சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பம்தற்போது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு 04146-259467என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X