செஞ்சி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு தினம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சி பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு தினம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி: செஞ்சி பேரூராட்சியில் தேசிய டெங்கு ஒழிப்பு தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு, செயல்அலுவலர் மூவேந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். இளநிலை உதவியார் ஆனந்த் வரவேற்றார். சத்தியமங்கலம் ஆரம்பசுகாதார நிலைய டாக்டர் மலர்விழி சிறப்புரை நிகழ்த்தினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எட்வர்ட் ராஜன், சுகாதார ஆய்வாளர்கள் ஏழுமலை, சண்முகம், செங்கேனி,பேரூராட்சி துப்புரவு மேற் பார்வையாளர்கள் ரமேஷ், செந்தில்குமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமையில், தேசிய டெங்கு ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை