கவர்னரின் ஆய்விற்கு எதிர்ப்பு தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவர்னரின் ஆய்விற்கு எதிர்ப்பு தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: கவர்னர் ஆய்விற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர், கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், பொறுப்பேற்ற சில நாட்களிலேயேஅதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதன் உச்சகட்டமாக மாவட்டம் தோறும் சென்று பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். கவர்னரின் செயலுக்கு தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் கறுப்பு கொடி காண்பித்து, எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் கவர்னர் புரோகித் கடலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் என அடுத்தடுத்து பல மாவட்டங்களில் ஆய்வுமேற்கொண்டார்.இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கவர்னர் புரோகித் தனது ஆய்வுபணியை மீண்டும் தொடங்கியுள்ளார். அவர் இன்று (18 ம் தேதி) விழுப்புரம்மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர், இன்று காலை 11:00 மணிக்கு, கறுப்பு கொடிஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X