தினமலர் செய்தி எதிரொலி குடிநீர் திட்டம் நிறைவடைந்தது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி குடிநீர் திட்டம் நிறைவடைந்தது

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செஞ்சி: அப்பம்பட்டு கிராமத்தில் அரைகுறையாக நின்ற குடிநீர் திட்ட பணியை எம்.எல்.ஏ., நிதிமூலம் நிறைவு செய்துள்ளனர்.செஞ்சி ஒன்றியம், கோணை ஊராட்சிக்கு உட்பட்ட அப்பம்பட்டு கிராமத்தில் குடிநீர் பிரச்னையை தீர்க்க 2016-2017 ம்நிதியாண்டில் தாய் திட்டத்தில் 8.58 லட்சம் நிதி ஒதுக்கினர். இதில் திறந்த வெளி கிணறும், பம்ப்ரூமும் அமைத்தனர்.ஆனால் நிதி பற்றாக்குறையால் பைப் லைன் கொண்டு வரும் பணியை பாதியில் நிறுத்திவிட்டனர்.தொடர்ந்து பல மாதங்களாக இதே நிலை நீடித்ததை சுட்டிக்காட்டி கடந்த மாதம் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து செஞ்சி எம்.எல்.ஏ., மஸ்தான், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 3.25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினார். இந்த நிதியில் புதிதாக பைப் லைன் அமைத்து, ஐந்து இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் அமைத்துள்ளனர்.இதன் துவக்க விழா நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை தாங்கினார். அவை தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாணவரணி அமைப்பாளர் அய்யாதுரை வரவேற்றார். எம்.எல்.ஏ., மஸ்தான், சின்டெக்ஸ் டேங்குகளை திறந்து வைத்தார். இதில் கிளை நிர்வாகிகள், ஊராட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை