சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலை முன் விவசாயிகள் போராட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரில், விவசாயிகள் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடந்தது.தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் தலைவர் சேதுராமன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனார்த்தனன், மாநிலகுழு உறுப்பினர் மோகன், சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் வரவேற்றார். மாநில பொருளாளர் சின்னப்பன், போராட்டத்தை துவக்கி வைத்தார்.மாநில துணைச்செயலாளர் ஜனார்த்தனன் பேசுகையில், விவசாயிகளுக்கு ஆலை தரப்பில் மூன்று ஆண்டுகளாக வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை 30 கோடி ரூபாயை வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் கதிர்கோபால், அசோக்குமார், வெங்கட்ராமன், கமலக்கண்ணன், செல்வம், திருநாவுக்கரசு, ரேணுக்கவுண்டர், ஜெகதீசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை