ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரெட்டணை ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் சாதனை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மயிலம்: ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மேல்நிலைத் தேர்வில், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுசாதனை படைத்துள்ளனர்.மயிலம் அடுத்த ரெட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87 மாணவ, மாணவிகளில், 83 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவி ஜெயஸ்ரீ தமிழில் 191, ஆங்கிலம் 187, கணக்கு 200, இயற்பியல் 195, வேதியல் 198, தவரவியல் 178 ஆக மொத்தம் 1149 மதிப்பெண்களும், மாணவர் சம்பத்குமார் 1080 மதிப்பெண்களும், மாணவர் ஜாகீர் 1060 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். திண்டிவனம் கல்வி மாவட்டத்தில், இப் பள்ளி முதலிடம் பெற்றுள்ளது.மேலும் பாட வாரியாக அதிகபட்சமாக, தமிழில் 193, ஆங்கிலம் 198, கணக்கு 200, வேதியியல் 162, உயிரியல் 179, தாவரவியல்190, விலங்கியல் 162, வணிகவியல் 153, கணக்குபதிவியல் 196, பொருளியல் 197 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களை, பள்ளி தாளாளர் பழனியப்பன், பள்ளி முதல்வர் அகிலா பழனியப்பன் மற்றும் பெற்றோர்கள்பாராட்டினர். பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X