'தொழில் முனைவோருக்கு நடப்பாண்டு ரூ.170 கோடி கடனுதவி'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'தொழில் முனைவோருக்கு நடப்பாண்டு ரூ.170 கோடி கடனுதவி'

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ''தமிழகத்தில், நடப்பாண்டு தொழில் முனைவோருக்கு, 170 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, தொழில்துறை கூடுதல் இயக்குனர் ராஜேஸ் கூறினார்.
சேலம், சீலநாயக்கன்பட்டி, தனியார் மரச்செக்கு ஆலையில், தொழில் துறை கூடுதல் இயக்குனர் ராஜேஸ், நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், தொழில் முனைவோருக்கு தடையின்றி அனுமதி வழங்க, கடனுதவி எளிதில் கிடைக்க, தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மரச்செக்கு ஆலைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதோடு, அத்தொழில் முன்னேற்றம் கண்டு வருகிறது. தொழில் முனைவோரை ஊக்குவிக்க, 'நீட்ஸ்' திட்டத்தில், ஐந்து கோடி ரூபாய் வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. நாட்டில், அதிகளவில் கடனுதவி வழங்கும் இத்திட்டத்தில், புதிதாக தொழில் தொடங்கும் முதல் தலைமுறையினருக்கு, 25 லட்சம் ரூபாய் வரை, மானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பிரதமரின் வேலை வாய்ப்பு, இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு ஆகிய திட்ட கடனுதவி, 40 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு, புதிதாக இயந்திரங்கள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கி பயன்படுத்த, நடப்பாண்டு மட்டும், தமிழகத்தில், 170 கோடி ரூபாய்க்கு கடனுதவி, மானியம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை