மாநகராட்சி வரி செலுத்த நாளை சிறப்பு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி வரி செலுத்த நாளை சிறப்பு முகாம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: ''சேலம் மாநகராட்சி வரியை செலுத்த, அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில், நாளை சிறப்பு முகாம் நடக்கவுள்ளது,'' என, கமிஷனர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதிய கட்டடங்களுக்கு சொத்து வரி, அதற்கான பெயர் மாற்றம், காலிமனை வரி, குடிநீர் இணைப்பு, அதற்கான பெயர் மாற்றம், இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் பெற, பாதாள சாக்கடை வைப்புத்தொகை, கட்டட வரைபட அனுமதி, அனுமதியற்ற மனை பிரிவுகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான சிறப்பு முகாம், நாளை நடக்கிறது. அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில், காலை, 8:45 முதல், மாலை, 4:45 மணி வரை நடக்கும் முகாமில், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு, அதற்கான உத்தரவு, ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும். மண்டல வார்டு மக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X