ரேஷன் கடைக்கு 4 கி.மீ., அலையும் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைக்கு 4 கி.மீ., அலையும் மக்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பனமரத்துப்பட்டி: இரு வார்டு மக்கள், ரேஷன் பொருட்கள் வாங்க, 4 கி.மீ., தூரம் அலையும் அவலம் நீடிக்கிறது. மல்லூர், ஒன்று, இரண்டாவது வார்டுகளில், பிச்சம்பாளையம், பச்சியம்மன் கோவில் கரடு அடிவாரம், பி.மேட்டூர் உள்ளிட்ட இடங்களில், 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். பிச்சம்பாளையத்திலிருந்து, 4 கி.மீ., தூரத்தில், மல்லூர் வேளாண் கூட்டுறவு சங்கம் அருகே, ரேஷன் கடை உள்ளது. இதனால், அங்கு சென்று, பொருட்கள் வாங்கி வர, மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், பொருட்கள் வரத்து, இருப்பு, வழங்கப்படும் நாள், நேரம் பற்றி தெரிவதில்லை. கடைக்கு, 80 சதவீதம் பொருட்கள் மட்டும் வருகின்றன. அதை, அருகேயுள்ள மக்கள் வாங்கிக்கொள்வதால், தூரத்திலிருந்து வரும் மக்களுக்கு சரியாக கிடைப்பதில்லை. மீறி வாங்கினாலும், அவற்றை தூக்கிச் செல்ல முடியாமல், மூதாட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, பிச்சம்பாளையம் அல்லது பி.மேட்டூரில், ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி, மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கையில்லை. மல்லூர் வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர் லோகநாதன் கூறுகையில், ''ஒரு கடையில், 1,500க்கும் அதிகமான கார்டுகள் இருந்தால், இரண்டாக பிரிக்கலாம். அந்த கடையில், 800க்கும் மேற்பட்ட கார்டுகளே உள்ளன. அதனால், கடை திறக்க வாய்ப்பில்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை