கோடையில் எள் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடையில் எள் சாகுபடி: விவசாயிகள் ஆர்வம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தலைவாசல்: சேலம் மாவட்டம், தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி சுற்றுவட்டாரங்களில், கோடை காலத்தில், குறைந்த நீர் பாசனம், அனைத்து மண்ணிலும் விளைச்சல் என்பதால், எள் சாகுபடியில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, தலைவாசல் வேளாண் அலுவலர் முருகேசன் கூறியதாவது: ஆடி, ஆவணி - காரிப்பருவம்; மாசி, பங்குனி - ரபி பருவத்தில் எள் பயிரிடப்படுகிறது. அதன்படி, தற்போது சுற்றுவட்டார பகுதிகளில், 500 ?ஹக்டேருக்கு அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளை எள் மகசூல் குறைவாக கிடைப்பதால், கறுப்பு எள்ளை பயிரிடுவதையே விவசாயிகள் விரும்புகின்றனர். காய்கள் வெடிப்பதை தடுக்க, செடிகளை அறுவடை செய்து, கட்டுக்கட்டாக அடுக்கி வைத்தல் வேண்டும். செடிகளை தலை கீழாக, மூன்று நாட்களுக்கு அடுக்கிவைத்த பின், பிரித்து செடிகளை உலர்த்தி, காய்களை வெடிக்க வைத்து, தட்டி, எள்ளை எளிதாக எடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். விவசாயிகள் கூறியதாவது: பேக்கரி, உணவு பொருட்கள், வாசனை மற்றும் அழகுப்பொருட்கள் தயாரிப்பில், எள் பயன்படுவதால், ஆண்டுதோறும் தேவை அதிகரித்து வருகிறது. ஏக்கருக்கு, ஒன்றரை கிலோ விதை எள் பயன்படுத்தி, 300 முதல், 350 கிலோ வரை மகசூல் பெற முடியும். நடப்பாண்டு, கறுப்பு எள் கிலோ, 70 முதல், 80 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். கடந்தாண்டு, 60 ரூபாய்க்கு விற்பனையானது. சற்று விலை கூடியதால், கணிசமான அளவு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை