10 நாளில் திருமண மாலை; விதி தந்ததோ பிண மாலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

10 நாளில் திருமண மாலை; விதி தந்ததோ பிண மாலை

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அம்மாபேட்டை: குருவரெட்டியூரில் டாரஸ் லாரி மோதியதில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் இறந்தார். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள பாலமலை, தாரபாளியை சேர்ந்தவர் கண்ணன், 25; இவருக்கு இன்னும், 10 நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது. குருவரெட்டியூர், குள்ளநரிமேடு, பெரியார் நகரை சேர்ந்தவர் முருகன், 43; திருமண விஷயமாக, இவருடன், ஹீரோ பைக்கில், நேற்று காலை, 11:30 மணியளவில் சென்றார். குருவரெட்டியூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, டாரஸ் லாரி மோதியது. இருவரும் பலத்த காயமடைந்தனர். பவானி தனியார் மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர். கண்ணன் சிறிது நேரத்தில் இறந்தார். கால் முறிந்த நிலையில், முருகன் சிகிச்சை பெறுகிறார். திருமணம் நடக்க, 10 நாட்களேயுள்ள நிலையில், வாலிபர் இறந்தது, உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை