வரும் 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு: கூட்டுறவு சங்க பணியாளர்கள் முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 21 முதல் ஒட்டுமொத்த விடுப்பு: கூட்டுறவு சங்க பணியாளர்கள் முடிவு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: கூட்டுறவு சங்க பணியாளர்கள், ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளனர். தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க, ஈரோடு மாவட்ட செயலாளர் சேதுபதி தலைமையில், ஈரோடு கலெக்டர் பிரபாகரை சந்தித்து, மனு வழங்கினர்.
பின், அவர் கூறியதாவது: தமிழகத்தில், நான்கு கட்டமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடந்தது. இத்தேர்தல் நடவடிக்கை குறித்து நீதிமன்றத்தால், இடைக்கால தடை விதிக்கப்பட்டு, விசாரணையில் உள்ளது. ஏற்கனவே, பொறுப்பிலிருந்த நிர்வாக குழுவின் பதவிக்காலம், 8ம் தேதியுடன் முடிந்து விட்டது. தற்போது, செயலாட்சியர் அல்லது நிர்வாக குழு இல்லாததால், எவ்வித தீர்மானமும் இயற்ற இயலவில்லை. பயிர் கடன், இதர கடன் வழங்கவில்லை. மத்திய வங்கியில் காசோலை மூலம், பணம் பெற இயலாததால், வைப்பு தொகைகளை திருப்பி வழங்க, அன்றாட வரவு, செலவுகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால், வரும், 21 முதல் பணியாளர்கள் அனைவரும், ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல, முடிவு எடுத்துள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கலெக்டர், மண்டல இணைப்பதிவாளர்களுக்கு தொழிற்சங்கம் சார்பில் கடிதம் வழங்கியுள்ளோம். அரசு நடவடிக்கைக்கேற்ப, எங்கள் விடுப்பு முடிவு அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X