கந்துவட்டி கொடுமையால் 'பகீர்': தொழிலாளி தற்கொலை முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் 'பகீர்': தொழிலாளி தற்கொலை முயற்சி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: கந்து வட்டி கொடுமையால், கணவன் தற்கொலைக்கு முயன்றதாக, மனைவி புகார் தெரிவித்தார்.
ஈரோடு, பெரிய சடையம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள், 31, சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று காலை வீட்டில் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பெருமாள் மனைவி நந்தினி, 25, கூறியதாவது: ஈரோடு, சம்பத் நகரில் உள்ள, ஒரு பைனான்சில், மூன்று மாதங்களுக்கு முன், 15 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். வாரந்தோறும் வட்டி கட்டுவதாக கூறினார். பாதி தொகை செலுத்தியுள்ளார். நேற்று முன்தினம், பைனான்ஸ் உரிமையாளர் வாசு, மற்றொருவருடன் வந்து, பணம் கேட்டு, ரோட்டில் தாக்கினார். தகாத வார்த்தை பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனமுடைந்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார். கணவனை தாக்கியவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை