வழியில் பொருட்கள்; சிரமத்தில் வாடிக்கையாளர்: முன்னோடி வங்கி செயலால் இடையூறு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வழியில் பொருட்கள்; சிரமத்தில் வாடிக்கையாளர்: முன்னோடி வங்கி செயலால் இடையூறு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஈரோடு, ஸ்டேட் பாங்க் ரோட்டில், மாவட்ட முன்னோடி வங்கியான, கனரா வங்கி செயல்படுகிறது. இங்கு தளவாட பொருட்கள் முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதனால் பயன்பாட்டில் இருந்த பொருட்கள் கழற்றப்பட்டன. இவற்றை சாலையில் தொடங்கி, வங்கி முன்புற கதவுக்கு செல்லும் பகுதிவரை, இருபுறங்களிலும் போட்டு வைத்துள்ளனர். இரண்டு வாரங்களை கடந்தும் அகற்றவில்லை. இதனால் தொங்கு பாலத்தில் நடந்து செல்லும் எச்சரிக்கையுடன், உடலை குறுக்கி கொண்டு செல்லும் நிலைக்கு, வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தளவாட பொருட்களை குவித்து வைத்துள்ளதால், இரும்பு கடைபோல் வங்கி காணப்படுகிறது. தளவாட பொருட்கள் காலில் இடறி, வாடிக்கையாளர்கள் விழ வாய்ப்பு உள்ளது. மேலும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை