பள்ளி வாகனங்களில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி வாகனங்களில் ஆய்வு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி, தனியார் பள்ளி வாகனங்களில், ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தனியார் பள்ளி வாகனங்களில், வருடாந்திர ஆய்வு நடக்கிறது. இதன்படி, சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, பள்ளி வாகனங்களில், நேற்று ஆய்வு நடந்தது. இதில் சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள, 123 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி உள்ளதா? கதவுகள் பூட்டப்படும் நிலையில் உள்ளதா, அவசர வழி கதவு இயங்குகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. ஓட்டுனர் உரிமம், வாகன சான்றுகள் சரி பார்க்கப்பட்டன. வாகனங்களை முறையாக இயக்குவது குறித்தும், பள்ளி குழந்தைகளை, கவனமாக ஏற்றி இறக்கவும், அதிகாரிகள் அறிவுறுத்தினர். கோபி ஆர்.டி.ஓ., பழனிவேலு தலைமையில், சத்தி தாசில்தார் கிருஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி, மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா மற்றும் பறக்கும்படை ஆய்வாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை