பேரூராட்சி வாகனம் சிறைபிடிப்பு: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி வாகனம் சிறைபிடிப்பு: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: பேரூராட்சி குப்பை வாகனத்தை, மக்கள் சிறைபிடித்ததால், சத்தியமங்கலம் அருகே, பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் அருகே, கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். நான்காவது வார்டில், 300 குடும்பத்தினர் உள்ளனர். பேரூராட்சி முழுவதிலும் சேகரிக்கப்படும் குப்பை, இந்த வார்டில் கொட்டப்படுகிறது. குடியிருப்புகளுக்கு அருகே குவிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, குப்பை கொட்ட வந்த, பேரூராட்சி டிராக்டரை மக்கள் சிறைபிடித்தனர். குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். செயல் அலுவலர் இளங்கோவன், வருவாய் துறை ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் சென்றனர். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக, இடம் பார்த்து குப்பை கொட்டுவதாக, அவர்கள் உறுதி கூறினர். இதையடுத்து வாகனத்தை மக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை