குழந்தை கடத்துவதாக சந்தேகம்:2 பேரை 'வளைத்த' கிராம மக்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தை கடத்துவதாக சந்தேகம்:2 பேரை 'வளைத்த' கிராம மக்கள்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே, மேட்டூர் கிராமத்துக்கு, வட மாநில வாலிபர்கள் இருவர், நேற்று காலை வந்தனர். ஒருவர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்க, மற்றொருவர் அப்பகுதி குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மக்கள், குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, சந்தேகம் அடைந்தனர். அவர்களை பிடித்து, சத்தி போலீசில் ஒப்படைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் இருவரும் உ.பி., மாநிலத்தை சேர்ந்த பர்கான், 22, ராகீஸ், 25, என்பதும், ஊர், ஊராக சென்று, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பதும் தெரிந்தது. முகவரி, அடையாள சான்றுகளை வாங்கிக் கொண்டு போலீசார் விடுவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X