பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை, நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மாவட்ட மலையில், இரு வாரங்களுக்கு முன் பெய்த மழையால், அணை நீர்மட்டம் சற்று உயர்ந்தது. இந்நிலையில், அணை நீர்த்தேக்க வனப்பகுதி, நீர்பிடிப்பு பகுதிகளில், இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம், 440 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று,1,345 கன அடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 48.84 அடியாக இருந்தது. நீர் இருப்பு, 4.1 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில், 200 கன அடி, கீழ்பவானி வாய்க்காலில், ஐந்து கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X