அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.,வினர் வாக்குவாதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அய்யாக்கண்ணுவிடம் பா.ஜ.,வினர் வாக்குவாதம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வந்தவாசி: வந்தவாசியில், மரபணு மாற்றம் குறித்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்த, அய்யாக்கண்ணுவிடம், பா.ஜ., வினர் வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு, விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் நூறு நாட்கள் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த, இரண்டு நாட்களாக, திருவண்ணாமலை மாவட்டத்தில், மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். தேரடி வீதியில், துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்த அய்யாக்கண்ணுவிடம், பா.ஜ., நகர தலைவர் குருலிங்கம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் துரை உள்ளிட்ட சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அங்கு வந்த போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து, அய்யாக்கண்ணு விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை