புகார் பெட்டி - தர்மபுரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - தர்மபுரி

Updated : மே 18, 2018 | Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நிழற்கூடம் இல்லாததால் அவதி: காரிமங்கலம் ஒன்றியம், ஜிட்டாண்டஅள்ளி பஞ்., சென்ன கேசவ பெருமாள் கோவில் அருகே, போரடஅள்ளி கூட்ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்கூடம், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், இடிந்து விழுந்தது. அதன் பின், நிழற்கூடம் அமைக்கவில்லை. இதனால், வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே, இங்கு புதிய நிழற்கூடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.சக்திஅருண்ராஜ், கோவிலூர்.

தண்ணீருக்கு தவிக்கும் கிராம மக்கள்: காரிமங்கலம் ஒன்றியம், பூமாண்டஹள்ளி பஞ்.,க்குட்பட்டது, மேக்கானாம்பட்டி. இங்கு, 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மூன்றுக்கும் மேற்பட்ட சிறு மின்விசை பம்புடன் கூடிய, குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இத்தொட்டி தண்ணீர் வராததால், கடந்த, ஓராண்டுக்கு மேல் காட்சி பொருளாக உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக சிரமம் அடைந்து வருகின்றனர்.

- சி.வீரபத்திரன், மக்கானாம்பட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X