மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாதையன் தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை, நிரந்தரமாக மூட வேண்டும். ஆற்று மணல், தாது மணல் கொள்ளையை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இயற்கை வளங்களை பாதுகாத்து, தமிழகம் பாலைவனமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். மாநில துணை செயலாளர் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை