மந்த கதியில் தார்ச்சாலை பணிகள்: இரண்டு மலைக்கிராம மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மந்த கதியில் தார்ச்சாலை பணிகள்: இரண்டு மலைக்கிராம மக்கள் அவதி

Added : மே 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காரிமங்கலம்: காரிமங்கலம் அருகே, ஆலமரத்துக்கொட்டாயில், மூன்று மாதங்களுக்கு மேலாக, மந்தமாக நடக்கும் தார்ச்சாலை பணிகளால், இரண்டு மலைக்கிராம மக்கள் அவதியடைகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே, ஜக்கசமுத்திரம் பஞ்.,க்கு உட்பட்ட, ஆலமரத்துக்கொட்டாய் மலைக்கிராமத்தில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதனருகே, ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில், போடரஅள்ளி மலைக்கிராமத்தில், 125க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆலமரத்துக்கொட்டாய் முதல் போடரஅள்ளி கிராமம் வரை, சேதமடைந்த தார்ச்சாலையை புதுப்பித்து, புதிய சாலை அமைக்கும் பணிகள், கடந்த, மூன்று மாதங்களுக்கு முன் துவங்கின. ஜல்லிக்கற்கள் நிரப்பிய பின், தார் ஊற்றாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டன. சாலைப்பணிகள் முடிந்தால் தான், மக்கள் மலையில் இருந்து, பிக்கனஅள்ளிக்கு வர முடியும். 'மந்தமாக நடக்கும் தார்ச்சாலை பணிகளை விரைவுபடுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்' என, இரண்டு மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X